search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • காங்கிரஸ் கடந்த தேர்தலை விட 35 இடங்களில் பின்தங்கியுள்ளது.
    • பா.ஜனதா 39 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் 90 இடங்களில் 68 இடங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. இந்த முறையும் காங்கிரஸ்தான் ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

    வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது. இதனால் எளிதாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. ஒரு கட்டத்தில் இரு கட்சிகளும் தலா 45 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

    10.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் 52 தொகுதிகளில் முன்னிலைப் பெற்றது. அதன்பின் பா.ஜனதா முன்னிலை வகிக்க தொடங்கியது. தொடர்ந்து பா.ஜனதா முன்னிலை பெற்றதுடன், ஆட்சி அமைப்பதற்கான 46 இடங்களையும் தாண்டி முன்னணி பெற்றது. பா.ஜனதா 54 இடங்களில் முன்னணி வகிக்கிறது. காங்கிரஸ் 33 தொகுதிகளில் முன்னணி வகிக்கிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 11 இடங்களில் முன்னிலை.
    • சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தெலுங்கானா, சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதேபோல் மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது.

    ராஜஸ்தானில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. தற்போதைய நிலையில் பா.ஜனதா 102 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 84 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

    ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பா.ஜனதா நான்கு மாநிலங்களில் கடந்த தேர்தலை விட கூடுதல் இடங்களை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் 100 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 8 இடங்கள் அதிகமாகும்.

    ராஜஸ்தானில் 101 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.. கடந்த தேர்தலை விட 33 இடங்கள் அதிகமாகும்.

    சத்தீஸ்கரில் பா.ஜனதா கூட்டணி 33 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 20 இடங்கள் அதிகமாகும்.

    தெலுங்கானாவில் பா.ஜனதா கூட்டணி 12 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. கடந்த தேர்தலை விட 11 இடங்கள் அதிகமாகும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா மீண்டும் ஆட்சியமைக்க இருக்கிறது.
    • தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது.

    4 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன. அதனைத்தொடர்ந்து 8.30 மணிக்கு வாக்கு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன

    காலை 8.40 நிலவரப்படி பா.ஜனதா 87 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்கிளிலும் முன்னிலை வகித்தன. பின்னர் நேரம் செல்ல செல்ல இரு கட்சிகளும் மாறிமாறி முன்னிலைப் பெற்று வந்தன. இதனால் கடும் இழுபறி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், 10 மணி நிலவரப்படி பா.ஜனதா முன்னிலை பெற்றது. 199 இடங்களில் 103 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது. இதனால் காங்கிரசிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
    • ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக சட்டசபை தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது.

    இதில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜனதாவும், காங்கிரசும் நேரடியாக மல்லுக்கட்டின. தெலுங்கானாவில் இந்த 2 தேசிய கட்சிகளுடன் பாரதிய ராஷ்டிர சமிதியும் சேர்ந்ததால் மும்முனை போட்டி நிலவியது.

    மிசோரமில் ஆளும் மிசோ தேசிய முன்னணியும், சோரம் மக்களின் இயக்கமும் நேரடியாக மோதிக்கொள்ள, காங்கிரஸ், பா.ஜனதா ஆகிய கட்சிகளும் சேர்ந்து களத்தை வலுப்படுத்தின.

    மத்திய பிரதேசம்

    பா.ஜனதா ஆளும் மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 230 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. மாநிலத்தில் 252 பெண்கள் உள்பட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

    அங்கு தபால் வாக்குகளையும் சேர்த்து 77.82 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்து இருந்தது. இந்த வாக்குகள் அனைத்தும் 52 மாவட்டங்களின் தலைநகரங்களில் எண்ணப்பட்டு வருகின்றன.

    முதல்- மந்திரி சிவராஜ் சிங் சவுகான், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத், மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், பக்கன்சிங் குலாஸ்தே, பா.ஜனதா பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா என ஏராளமான முக்கிய வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    மாநிலத்தில் பா.ஜனதாவே மீண்டும் ஆட்சியமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து இருந்தன. இது அந்த கட்சியினருக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது.

    அதேநேரம் இதை புறக்கணித்துள்ள காங்கிரசார், மாநிலத்தில் ஆட்சியை பிடிப்போம் என நம்பிக்கை தெரிவித்து இருக்கின்றனர். கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியை பிடித்தும், 2020-ம் ஆண்டு பா.ஜனதாவிடம் பறிகொடுத்ததைப்போல இந்த முறை நடக்காது என்றும் அவர்கள் உறுதிபட கூறியுள்ளனர்.

    ராஜஸ்தான்

    200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு கடந்த 25-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் 74.62 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

    முதல்-மந்திரி அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்-மந்திரி சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் வேட்பாளர்களும், முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜே, எதிர்க்கட்சி தலைவர் ராஜேந்திர ரத்தோர் உள்ளிட்ட பா.ஜனதா வேட்பாளர்களும் தங்கள் அரசியல் எதிர்காலத்தை அறிய ஆவலுடன் உள்ளனர்.

    மாநிலத்தில் கடந்த சில தேர்தல்களாகவே ஒவ்வொரு 5 ஆண்டும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறிமாறி ஆட்சிக்கு வருகின்றன.

    தற்போது அங்கே காங்கிரஸ் ஆண்டுவரும் நிலையில், அடுத்த 5 ஆண்டுகள் தங்களது ஆட்சி என பா.ஜனதாவினர் நம்புகின்றனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் அவர்களுக்கு ஆதரவாகவே உள்ளன.

    சத்தீஸ்கர்

    காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் கடந்த மாதம் 7 மற்றும் 17-ந்தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளில் 76.31 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    முதல்-மந்திரி பூபேஷ் பாகேல், துணை முதல்-மந்திரி சிங் தியோ, முன்னாள் முதல்-மந்திரி ராமன் சிங் உள்பட ஆளும் காங்கிரஸ், பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 1,181 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலம் இன்று தெரியவரும்.

    அங்கு தேர்தலுக்கு பின்பு எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் ஆளும் காங்கிரசே மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றும் என தெரிய வந்திருக்கிறது.

    தெலுங்கானா

    பாரதிய ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) ஆளும் தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிகளுக்கும் கடந்த 30-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. அங்கு பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே மும்முனை போட்டி நிலவியது.

    இந்த கட்சிகளை சேர்ந்த 2,290 வேட்பாளர்கள் போட்டிக்கோதாவில் உள்ளனர். இதில் முதல்-மந்திரி சந்திரசேகர் ராவ், அவரது மகன் கே.டி. ராமாராவ், காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி, பா.ஜனதா எம்.பி.க்கள் பண்டி சஞ்சய் குமார், அரவிந்த் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். மாநில தேர்தலில் 71.34 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

    தெலுங்கானா பிரிவினைக்கு முக்கிய பங்காற்றிய சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்டிர சமிதி கட்சி, மாநிலத்தில் கடந்த 2 முறையாக தொடர்ந்து ஆட்சியில் உள்ளது. அங்கு ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் அந்த கட்சி உள்ளது.

    ஆனால் இந்த முறை மாநில மக்கள் மாற்றத்தை சிந்தித்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவித்து உள்ளன.

    மத்தியில் ஆளும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரசை உள்ளடக்கிய இந்தியா கூட்டணியும் இந்த தேர்தல்களை அடுத்த ஆண்டு (2024) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதி களப்பணி ஆற்றின.

    எனவே இந்த மாநிலங்களின் தேர்தல் முடிவுகளுக்காக அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தேசமும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கிறது. இவ்வாறு ஆவலை தூண்டியிருக்கும் இந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது இன்று பிற்பலுக்குள் தெரிந்துவிடும்.

    • நான்கு 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த 30-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டது.

    இன்று காலை வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்த வேட்பாளர்கள், கட்சி முகவர்கள் கடும் சோதனைக்குப்பின் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்பின் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

    • ம.பி.யில் பா.ஜனதா 100 முதல் 123 இடங்களையும், காங்கிரஸ் 102 முதல் 125 இடங்களையும் பெறும் என தெரிய வந்துள்ளது.
    • 86 முதல் 106 இடங்கள் வரை ஆளும் காங்கிரஸ் பெறும் எனவும் பா.ஜனதா 80 முதல் 100 இடங்கள் வரை கைப்பற்றும்

    5 மாநில தேர்தல் வாக்குப்பதிவு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நேற்று வெளியிடப்பட்டது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் பா.ஜனதாவுக்கும், தெலுங்கானா, சத்தீஸ்காரில் காங்கிரசுக்கும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் கூறியுள்ளன.

    இந்த நிலையில் கருத்து கணிப்பு குறித்து தலைவர்கள் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்...

    ராஜஸ்தான் மாநில மந்திரி மகோஷ ஜோஷி: முழு மெஜாரிட்டியுடன் காங்கிரஸ் ராஜஸ்தானில ஆட்சியமைக்கும். அதுபோக அனைத்து மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்: மற்ற மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு சிறப்பாக உள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சூழ்நிலைய நன்றாக இருக்கிறது. தெலுங்கானாவில் நாங்கள் 80 சதவீத இடங்களை பிடிப்போம். காங்கிரஸ் 4 மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும்.

    பா.ஜனதா சீனியர் தலைவர் சரோஜ் பாண்டே (சத்தீஸ்கர்): பா.ஜனதா ஏராளமான வளர்ச்சியை கொடுத்துள்ளது. நாங்கள் எங்கெல்லாம் ஆட்சி செய்து வருகிறமோ, அங்கெல்லாம் ஆட்சி அமைப்போம். அதேபோல் ஆட்சி செய்யாத மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்போம். மோடி மீதான நம்பிக்கை மக்கள் காட்டியுள்ளனர்.

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி: இது காங்கிரஸ்- பிஆர்எஸ் இடையிலான தேர்தல் அல்ல. 4 கோடி மக்கள் பிஆர்எஸ்-க்கு எதிராக உள்ளனர். இது தெலுங்கானா மக்களின் வெற்றி. முதல் மந்திரிசபை கூட்டத்தில் 6 வாக்குறுதிகளை நிறைவேற்ற அனுமதி பெற்று செயல்படுத்துவோம். நாங்கள் முழு வெற்றி பெறுவோம். இதைத்தான் கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

    சத்தீஸ்கர் மாநில பா.ஜனதா தலைவர் அருண் சாயோ: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட மாதிரி அளவைக் கொண்டுள்ளன. பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

    ராபர்ட் வதேரா: நான் கருத்துக் கணிப்பை பெரிய அளவில் நம்பவில்லை. நான் உண்மையான முடிவை நம்புகிறவன். நான் கடந்த சில மாதங்களாக ஏராளமான மக்களை சந்தித்தேன். அவர்கள் விரக்தியில் இருந்தனர். குறிப்பாக மத்திய பிரதேசத்தில். ஆட்சியை கவிழ்த்தது தொடர்பான விரக்தி தெரிந்தது.

    பா.ஜனதா எம்.பி. சாத்வி பிரக்யா சிங் தாகூர்: அனைத்து மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சி அமைக்கும். பா.ஜனதா செய்த பணிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர்.

    சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர் பிரேம் பிரகாஷ் பாண்டே: கருத்துக் கணிப்பு குறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். ஆனால், பா.ஜனதா ஆட்சி அமைக்கும். இதற்கு காரணம் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்.

    காங்கிரஸ் தலைவர் திக்விஜய சிங்: கருத்துக் கணிப்பு மிகவும் வித்தியாசமாக உள்ளது. நாங்கள் அது குறித்து எந்த கருத்தையும் சொல்ல முடியாது. மத்திய பிரதேசத்தில் 130 தொகுதிகளுக்கு மேல் பிடிக்கும் என்ற உறுதியை என்னால் உங்களுக்கு கொடுக்க முடியும். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முதல்வர் சிவ்சராஜ் சிங் சவுகான் மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

    பா.ஜனதா எம்.பி. ரதோர் (ராஜஸ்தான்): மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். முழு மெஜாரிட்டியுடன் ராஜஸ்தானில் பா.ஜனதா ஆட்சியமைக்கும். கருத்துக் கணிப்பு வரையறுக்கப்பட்ட பகுதிக்கானது. 3-ந்தேதி முடிவு பா.ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும்.

    • காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.
    • காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது, "பா.ஜனதா என்றால் வளர்ச்சி என்று அர்த்தம். காங்கிரஸ் கட்சி என்றால் அழிவு, ஊழல், சுரண்டல் என்று அர்த்தம்.

    பா.ஜனதா என்றால் வளர்ச்சிக்கான அரசு, பெண்களுக்கான அதிகாரம், விவசாயிகளின் உரிமைகளை பாதுகாப்பவர் என்று அர்த்தம். காங்கிரஸ் என்றால் கொள்ளை, ஏமாற்றுதல் என்று அர்த்தம்" என்றார்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக கடந்த 7-ந்தேதி 20 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. நாளைமறுநாள் (நவம்பர் 17-ந்தேதி) 70 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

    • தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது.
    • காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரை கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

    90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் ஏற்கனவே கடந்த 7-ந்தேதி முடிவடைந்தது. 70 தொகுதிகளுக்கான 2-வது கட்ட தேர்தல் வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    இதனையொட்டி பிரதமர் மோடி சத்தீஸ்கரில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    அவர் இன்று மதியம் முங்கெலி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாகவது:-

    தற்போது ஆட்சியில் இருந்து வெளியேறும் நேரம் என்பதை காங்கிரஸ் புரிந்து கொண்டுள்ளது. டெல்லியில் இருந்து சில பத்திரிகையாளர் நண்பர்கள், அரசியல் ஆய்வாளர்கள் என்னிடம் சத்தீஸ்கர் முதல்வர் பாகேல் அவர் தொகுதியிலேயே தோற்கடிக்கபடுவார் என்று தெரிவித்தனர்.

    காங்கிரஸ் மோடியை வெறுக்கிறது. மோடி சமூகத்தினரையும் கூட வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள். மோடி பெயர் கொண்ட சமூகத்தினரை கடந்த பல மாதங்களாக அவர்கள் துஷ்பிரயோகம் செய்து வருகிறார்கள். நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும்கூட, அவர்கள் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டனர்.

    ஓ.பி.சி. சமூகத்தினரை அவர்கள் எந்த அளவிற்கு வெறுக்கிறார்கள் என்பதற்கு இது எடுத்துக்காட்டு. காங்கிரஸ் அம்பேத்கரை அவமதிக்கிறது. அம்பேத்கரின் அரசியலுக்கு முடிவு கட்ட சதி செய்தது காங்கிரஸ். வாக்கு வங்கிற்காகவும், சமரசம் செய்து கொள்வதற்காகவும் காங்கிரஸ் எதை வேண்டுமென்றாலும் செய்யும்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம்.
    • பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளராக ED செயல்பட்டு வருகிறது.

    சத்தீஸ்கர் மாநிலத்தின் பைகுந்த்பூர் மற்றும் கத்கோரா பகுதிகளில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறையை கொண்டு, காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் வெற்றி பெறுவதை தடுப்பதாக குற்றம்சாட்டி உள்ளார்.

    பைகுந்த்பூர் பகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட கார்கே, பா.ஜ.க., பிரதமர் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஆகியவை தொகுதியை மாற்ற முயற்சித்து வருகின்றன. அவர்களை தடுத்து நிறுத்த காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர் உள்பட நடைபெற இருக்கும் ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற வேண்டியது அவசியம் ஆகும்.

    இதைத் தொடர்ந்து கத்கோராவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய கார்கே, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்டவை பிரதமர் மோடியின் நட்சத்திர பேட்சாளர்களாக செயல்பட்டு வருகின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்த அமைப்புகள் தொடர்ச்சியாக காங்கிரஸ் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்துகின்றன.

    கடந்த செவ்வாய் கிழமை மிசோரம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. சத்தீஸ்கர் மாநிலத்தின் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இம்மாத இறுதியிலும் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

    • சத்தீஸ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு நடைபெற்றது
    • மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    ராய்ப்பூர்:

    சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக இன்று 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 70 தொகுதிகளில் 2-வது கட்டமாக நவம்பர் 17-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

    முதல் கட்டமாக நடந்த தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெற்றது.

    இதர 10 தொகுதிகளில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. இந்த 20 தொகுதிகளுமே மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள மாவட்டங்களில் உள்ளவை ஆகும்.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இருமுனைப் போட்டிதான் நிலவுகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியும், பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வும் இடையே கடும் போட்டி உள்ளது. முதல் மந்திரியாக காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகல் பதவியில் உள்ளார். வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

    இந்நிலையில், சத்தீஸ்கரில் இன்று மாலை 5 மணி நிலவரப்படி 70.87 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    • சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.
    • காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.

    சத்தீஸ்கர் மாநிலத்தில் 20 தொகுதிகளுக்கு இன்று முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 2-வது கட்டத்தேர்தல் 70 தொகுதிகளுக்கு வருகிற 17-ந்தேதி நடைபெற இருக்கிறது.

    2-ம் கட்ட தேர்தல் நடைபெறும் சர்குஜா பகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, பழங்குடியினருக்கு செலவு செய்யும் பணம் வீண் என நினைத்தது.

    பழங்குடியின மக்களின் குடும்பத்தில் இருந்து ஒருவர் ஜனாதிபதியாக வரலாம் என யாராவது ஒருவர் நினைத்தார்களா?

    நான் சேவை செய்வதற்காக பிறந்தவன். நான் சேவை செய்வதற்காக நீங்கள் எனக்கு பணியை கொடுத்துள்ளீர்கள்.

    காங்கிரஸ் ஆட்சியில் மனித கடத்தல், போதைப்பொருள் தொழில் சர்குஜா பகுதியில் அதிகமாக இருந்தது.

    காங்கிரசின் சமரசம் செய்துகொள்ளும் கொள்கையால், சத்தீஸ்கரின் சர்குஜா பகுதியில் பண்டிகைகளைக் கொண்டாடுவது கடினமாகிவிட்டது.

    சத்தீஸ்கரில் மாவோயிஸ்டை கட்டுப்படுத்த காங்கிரஸ் தவறிவிட்டது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    • கடந்த ஐந்து ஆண்டுகளில் நக்சலிசம் பெருமளவு பின்வாங்கியுள்ளது- பூபேஷ் பாகெல்
    • பா.ஜனதா முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும்- ராமன் சிங்

    சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று காலை 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. நக்சலைட் மற்றும் மாவோயிஸ்ட் அச்சுறுத்தல் அதிகமாக இருக்கும் இடங்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் மாவோயிஸ்ட் தாக்குதலில் சிஆர்பிஃஎப் வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

    தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பா.ஜனதா தலைவரும், சத்தீஸ்கர் முன்னாள் முதல்வருமான ராமன் சிங் கூறுகையில் ''முதற்கட்ட தேர்தலில் பா.ஜனதா குறைந்தது 14 இடங்களில் வெற்றிபெறும். இரண்டு கட்ட தேர்தலும் சிறப்பாக அமையும். முழு மெஜாரிட்டியுடன் பா.ஜனதா ஆட்சி அமைக்கும்'' என்றார்.

    சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகெல் கூறுகையில் ''கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் முயற்சியால் நக்சலிசம்

    பெருமளவு பின்வாங்கியுள்ளது. இதனால் கிராமத்திற்கு உள்ளே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் மக்கள் தானாக முன்வந்து வாக்களிப்பார்கள். நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.

    ×